இந்திய அரசு மாநிலங்களின் ஒன்றிய அரசு. இதுவே அரசியல் சாசனத்தின் ஆன்மா – கே.சுப்பராயன் முழக்கம்

கே.சுப்பராயன் MP முகநூல் பதிவில் இருந்து…
இந்திய அரசு மாநிலங்களின் ஒன்றிய அரசு தானே தவிர மாநிலங்களை ஒடுக்கி ஆளுகிற அரசு அல்ல! இதுதான் தேசிய விடுதலை இயக்கம் முன் வைத்த ஞானவழி! இதுவே அரசியல் சாசனத்தின் ஆன்மாவும் ஆகும்!
ஆனால், தேசிய விடுதலை இயக்கத்தை எதிர்த்த தேசவிரோத சக்திகள், வர்ணாஸ்ரம அடிப்படையில் புதிய அரசியல் சட்டத்தை நிறைவேற்றத்துடிக்கும் விஷமசக்திகள் தேசத்தை வழிநடத்தும் பொறுப்பில் அமர்ந்துவிட்டன!அதனுடைய விபரீத விளையாட்டுகள் கடந்த ஏழரை ஆண்டுகளாக அரங்கேறி வருகின்றன!
பல்வேறு மாறுபட்ட மொழிகள், தேசிய இனங்கள், பண்பாடுகள் கொண்ட கோடான கோடிக்கணக்கான மக்களை எரிச்சலூட்டாமல், ஏமாற்றாமல், வஞ்சனை புரியாமல் ஒன்றிணைக்கிற ஒன்றாக ஒன்றிய அரசு நடைமுறையில்இருக்க வேண்டும்!
இந்தியா என்ற நாட்டை ஒன்றாக நீட்டிக்க வைக்க விரும்புகிற ஆட்சியாளர்கள் அதைத்தான் செய்வார்கள், செய்ய வேண்டும்!இந்த உள்ளடக்கத்தை மீறி செயல்படுவது நாட்டின் ஒற்றுமையை சிதைக்கிற குற்ற நடவடிக்கையாகவே அமையும்!