இந்தியக் குடும்பங்களின் வலி மோடி, ஆதித்யநாத்திற்கு புரியாது!
லக்னோ, பிப். 11 – “குடும்பம் உள்ளவர்களுக்குதான் ஒரு குடும்பத்தின் வலி புரியும்” என்றும், “பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உ.பி. முதல்வர் ஆதித்ய நாத்திற்கு அது புரியாது” என்றும் சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகி லேஷ் கூறியுள்ளார். “வாரிசு அரசியல் ஜனநாயகத்தின் மிகப்பெரிய எதிரி. குறிப்பாக, சமாஜ் வாதி கட்சியை எடுத்துக் கொண்டால், அந்த கட்சித் தலைவரின் குடும்பத்தை சேர்ந்த 45 பேர் பல்வேறு பதவிகளை வகிக்கின்றனர்” என்று பிரதமர் மோடி பேட்டியில் கூறியிருந்தார். மோடியின் இந்த விமர்சனத்திற்குத் தான் சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் பதிலளித்துள்ளார். “இந்த விஷயத்தைப் பொறுத்த வரை, குடும்பம் உள்ளவர்களுக்குத் தான் ஒரு குடும்பத்தின் வலி புரியும். குடும்பம் இல்லாதவர்களால் அதைப் புரிந்து கொள்ள முடியாது என்று சொல்ல விரும்புகிறேன். நாங்கள் குடும்பங்களை வைத்திருப்பதில் பெருமைப்படுகிறோம். ஒரு குடும்ப நபர், பையை எடுத்துக் கொண்டு குடும்பத்தை விட்டு ஓட மாட்டார். லாக்டவுன் காலத்தில், முதல்வருக்கு ஒரு குடும்பம் இருந்திருந் தால், பல மைல்கள் தூரம் நடந்து தங்கள் வீட்டை அடையும் தொழி லாளர்களின் வலியை அவர் புரிந்து கொண்டிருப்பார்” என்று அகிலேஷ் பதிலடி கொடுத்துள்ளார்.