தமிழகம்
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளராக தோழர் இரா.முத்தரசன் தேர்வு
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாடு ஆகஸ்ட் 6, 7, 8, 9 ஆகிய தேதிகளில் திருப்பூரில் நடைபெற்றது. இம்மாநாட்டில் தோழர் இரா.முத்தரசன் அவர்களை தோழர் மு.வீரபாண்டியன் முன்மொழிய, தோழர் எம்.செல்வராஜ் எம்.பி. வழிமொழிய மாநிலச் செயலாளராக ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.