இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) – ன் பொதுச் செயலாளராக தோழர் சீதாராம் யெச்சூரி மீண்டும் தேர்வு – புரட்சிகர வாழ்த்துகள்!
கேரள மாநிலம் கண்ணுரில் நடைபெற்று வரும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) – ன் 23வது அகில இந்திய மாநாட்டில் தோழர் சீதாராம் யெச்சூரி அக்கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளராக மூன்றாவது முறை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
85 உறுப்பினர்களைக் கொண்ட மத்திய குழுவும், 17 உறுப்பினர்களைக் கொண்ட அரசியல் தலைமை குழுவும் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) – ன் பொதுச் செயலாளராக மூன்றாவது முறை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தோழர் சீதாராம் யெச்சூரிக்கும், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மத்திய குழு மற்றும் அரசியல் தலைமை குழு உறுப்பினர்களுக்கும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் தோழர் டி. ராஜா தனது வாழ்த்துகளை முகநூலில் பதிவு செய்துள்ளார்.
நாட்டையும் மக்களையும் ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க விடம் இருந்து காப்பாற்ற இணைந்து போராடுவோம் என்று அவர் தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.