இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராகத் தோழர் டி. ராஜா தேர்வு
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் 24 – வது அகில இந்திய மாநாட்டின் நிறைவான 18.10.2022 ஆம் தேதி 125 உறுப்பினர்கள், 13 தேர்வு உறுப்பினர்கள் கொண்ட தேசியக் குழு ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டது.
தமிழ்நாட்டில் இருந்து தோழர்கள் இரா முத்தரசன், நா பெரியசாமி, மு. வீரபாண்டியன், டி எம் மூர்த்தி, க. சந்தானம், எம் ஆறுமுகம், வகிதா நிஜாம், வை. சிவபுண்ணியம், டி. ராமசாமி, மு. கண்ணகி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
இவர்களில் இரா.முத்தரசன், டி எம் மூர்த்தி ஆகியோர் தேசிய நிர்வாகக் குழுவிற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்
மத்திய கட்டுப்பாட்டுக் குழு: மாநாடு 11 உறுப்பினர்கள் கொண்ட, மத்தியக் கட்டுப்பாட்டுக் குழுவை ஒருமனதாகத் தேர்வு செய்தது. இந்தக் கட்டுப்பாட்டுக் குழுவிற்கு தமிழ்நாட்டில் இருந்து தோழர் திருச்சி எம். செல்வராஜ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
கட்சியின் பொதுச் செயலாளராக தோழர் டி. ராஜா மீண்டும் தேர்வு செய்யப்பட்டார்.