கலைஞர், தா பாண்டியன் உள்ளிட்ட தலைவர்கள் மறைவுக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் 24வது அகில இந்திய மாநாட்டில் அஞ்சலி
தி.மு.கழகத் தலைவர் கலைஞர் மறைவுக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் 24-வது அகில இந்திய மாநாட்டில் அஞ்சலி செலுத்தப்பட்டது.
மாநாட்டின் முதல் நிகழ்வாக சென்ற மாநாடிற்கு பிறகு, கடந்த நான்காண்டு காலத்தில் காலமான அரசியல் தலைவர்கள், கலைஞர்கள், பல்துறை வல்லுனர்கள், பொதுவாழ்வு பிரமுகர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
இதில் கடந்த 2018 ஆகஸ்ட் 7 ஆம் தேதி காலமான தி மு கழகத் தலைவர் முத்தமிழறிஞர் கலைஞர், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னணி தலைவர் தா பாண்டியன்,
தேசியக் குழு உறுப்பினர் மதுரை பி. சேதுராமன், விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர் வே. துரைமாணிக்கம், தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் எஸ் அழகுமுத்து பாண்டியன் உள்ளிட்டோர் பணிகள் குறித்து நினைவு கூர்ந்து, மாநாட்டு பிரதிநிதிகள் அனைவரும் எழுந்து நின்று மரியாதை செலுத்தி மறைந்த தலைவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.
அஞ்சலி தீர்மானத்தைக் கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினரும், ஏ.ஐ.டி.யு.சி பொதுச் செயலாளருமான அமர்ஜீத் கவுர் முன்மொழிந்தார்.