இடதுசாரி, ஜனநாயக, மதச்சார்பற்ற சக்திகளை ஒன்றுதிரட்டுக – கே சுப்பராயன் MP அறைகூவல்
தோழர் கே சுப்பாராயன் MP முகநூல் பதிவில் இருந்து…
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் வரலாறு சோகம் ததும்பிய, வீரம் கொப்பளித்த வரலாறாகும்!
அதனுடைய அரசியல் நிலையும், தத்துவ வழியும் தெளிவானது, உறுதியானது!
சிக்கலான சவால்களும், திருகல் முறுகலும் நிறைந்த இன்றைய அரசியல் சூழ்நிலையில் இடதுசாரி, ஜனநாயக, மதச்சார்பற்ற சக்திகளை விரிவான முறையில் ஒன்றுதிரட்டுவதே ஆகும்! இதுதான் இன்றைய இந்திய அரசியல் தேவை என்பதை, தேர்ந்து, தெளிந்து வரையறுத்துள்ளது!ஆனால், இந்த அரசியல் தேவையை நிறைவேற்றுவதற்குரிய அரசியல் சக்திகள் வளர்ச்சி பெறவில்லை என்பதை, அனுபவம் உணர்த்துகிறது!
தன் முனைப்பும், சுய ஆதாயக் கண்ணோட்டமும் அரசியல் சக்திகளை கட்டிப்போட்டுள்ளன! இதிலிருந்து விடுபட்டு மீண்டு எழ வைக்க, இடைவிடாது தொடர்ந்து இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி போராடும்!
‘இந்துத்வா’ என்ற தீய கருத்தோட்டம், பல வருடங்களாக நமதுதேசிய வாழ்வின் நிலைத்த கூறுகளை கருக்கி அழித்து வருகிறது! ‘இந்துத்வாவின்’மையமான நோக்கம் ஆபத்தானதாகும்! வர்ணாஸ்ரம அடிப்படையிலான ஒரு அரசியல் சட்டத்தை இயற்றுவதாகும்! இந்திய சமூகத்தை சாதிகளாக, உட்பிரிவுகளாக, திட்டவட்டமான அகமணமுறை கெண்டதாக ‘நிரந்தரமாகப்பிளவுபடுத்திவைத்துக்கொள்வதே’ அந்த ‘ஒற்றை இந்தியாவின் ‘ நோக்கமாகும்!
சமூகத்தை பிளவுபடுத்திவைப்பதை தனது அந்தரங்க நோக்கமாகக் கொண்ட விஷமத்தனமான தீய போக்கிற்கு எதிராக விழிப்போடு போராடுக எனக் காலம் அழைக்கிறது!
கே.சுப்பராயன் MP