ஆர் எஸ் எஸ் அமைப்பின் மோசமான அரசியல் ஆயுதம் தான் சீமான் – கே.சுப்பராயன் MP
தமிழ்மொழி உலகின் மிக மூத்த மொழி!
அது பெற்றெடுத்த ஞானச் செல்வங்கள் தமிழ் இலக்கியங்களில் உறைந்து கிடக்கின்றன! அவை தமிழ்மண்ணில் விளைந்த சிந்தனைத் திறனை, பெரிதினும் பெரிது காட்டிய மேன்மையை இன்றும் பறைசாற்றுகின்றன! தமிழ் மண்ணின் மரபுகளுக்கும், மனித குல மாண்புகளுக்கும் நேர் எதிரான கருத்தோட்டம் கொண்ட தீயசக்திகள், ஒன்றிய அரசை வஞ்சக சதிராடி கைப்பற்றிக்கொண்டன!
தமிழ் தேசிய இனம் உட்பட இந்தியாவின் பல்வேறு தேசிய இனங்களின் வரலாற்றுச் செறிவை, இணக்கமான போக்கை, பண்பாட்டு மூலங்களை அழித்தொழிப்பதையே தனது அரசியலாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது பாஜக! அது முன்வைத்துள்ள கொள்கை தான் ‘மேல் வருண (!?) மேலாதிக்கத்தை அடிப்படையாகக் கொண்ட வர்ணாஸ்ரம இந்துத்துவா!ஆனால்,அதை தமிழ்நாட்டில் நிறைவேற்ற விடாமல் தடுப்பதில் சக்திமிக்க முக்கிய பங்குவகிப்பது திமுக! திமுகவிற்கு தளமாக இருப்பவர்கள் தமிழர்கள்! தமிழர்களிடமிருந்து திமுகவை பிரிப்பதே பாஜகவின் தற்போதைய தமிழ்நாட்டு சூழ்ச்சிஅரசியல்!
அப்போதுதான் தமிழ்நாட்டில் தங்கள் அரசியல் நோக்கம் நிறைவேறுமென்று பாஜக கருதுகிறது!அதற்காக ஆர் எஸ் எஸ் அமைப்பால் களம் இறக்கிவிடப்பட்ட மோசமான அரசியல் ஆயுதம் தான் சீமான்!
பாஜகவின்இந்த அரசியல் சூழ்ச்சியை தமிழ்நாட்டில் அம்பலப்படுத்துவது அரசியல் அவசியமாகும்!
கே.சுப்பராயன் MP