ஆர்எஸ்எஸ் சித்தாந்தங்கள் நாட்டை அரிக்கும் கரையான்கள்!
இந்தூர், ஜன.11- “ஆர்எஸ்எஸ் அமைப்பின் சித்தாந்தங்கள் கரையானைப் போல் நாட்டின் அமைப்பு முறை யை சத்தமில்லாமல் அழிக்கின் றன” என்று ம.பி. முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான திக்விஜய் சிங் குற்றம் சாட்டியுள்ளார். மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் பத்திரிகையாளர் சங்கம் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், இதுதொடர்பாக திக்விஜய் சிங் மேலும் பேசி யிருப்பதாவது: ஆர்எஸ்எஸ் அமைப்பு கரையானைப் போன்றது. வீடு களில் கரையான் சத்தமில்லா மல் பொருட்களை சேதப்படுத்து வது போன்று நாட்டின் அமைப்பு முறையை ஆர்எஸ்எஸ் சித்தாந்தங்கள் சேதப்படுத்தி, அழிக்கின்றன. ஆர்எஸ்எஸ் அமைப்பை, கரையானுக்கு ஒப்பிட்டுப் பேசு வதால் நான் கடுமையாக விமர் சிக்கப்படுவேன் என்பது தெரி யும். ஆனால், நான் ஆர்எஸ்எஸ் அமைப்பை கரையான் எனச் சொல்லவில்லை, அதன் சித் தாந்தங்கள்தான் கரையானைப் போன்றவை என்கிறேன். உத்தரப்பிரதேசத்தில் சட் டப்பேரவைத் தேர்தல் நடக்க இருக்கிறது. அங்கு செல்லும் போது, பத்திரிகையாளர்கள் முதல்வர் ஆதித்யநாத்தின் பேச்சை கவனமாகக் கேளுங் கள்.
அவர் இந்து – முஸ்லிம், இந் தியா – பாகிஸ்தான், எரியூட்டு மிடம், புதைக்குமிடம். இதைத் தவிர வேறு எதையும் பேச மாட்டார்… இந்து மதம் ஒருபோதும் ஆபத்தைச் சந்தித்தது இல்லை. நூற்றாண்டுகளுக்கு முன் முஸ் லிம் மன்னர்கள், கிறிஸ்தவர் களான ஆங்கிலேயர்கள் ஆண்ட போதுகூட இந்து மதம் ஆபத் தைச் சந்தித்தது இல்லை. பாசிச சித்தாந்தத்தை முன்னெடுக்க வும், அரசியல் பதவிகள் மூலம் பணம் ஈட்டவுமே இதுபோன்ற கருத்துக்கள் பரப்பப்படுகின் றன. ‘இந்துத்துவா’ என்ற வார்த்தை அரசியல் ஆயுதமாக பயன்படுத்தப்படுகிறது, ஆனால், இந்து மதத்துக்கும், ‘இந்துத் துவா’ என்ற வார்த்தைக்கும் தொடர்பில்லை. இதனை வி.டி. சாவர்க்கரே, 1923-ஆம் ஆண்டு எழுதிய புத்தகத்தில், “இந்து மதத்தை என்பது ‘இந்துத் துவா’ எனக் கூறுவது தவறான கருத்து” என்று தெரிவித்துள் ளார். தேசத்தை இரண்டாகப் பிரிக்கும் திட்டம் முஸ்லிம் லீக் கிற்கும், முகமது அலி ஜின்னா வுக்கு மட்டும் இருந்ததாகக் கூறுகிறார்கள். ஆனால், இரு தேச எண்ணம் சாவர்க்கருக்கும் இருந்தது. இவ்வாறு திக்விஜய் சிங் பேசியுள்ளார்.