ஆதித்யநாத்தின் ஆட்சியில் உ.பி. சீர்குலைந்து விட்டது!
அகிலேஷ் குற்றச்சாட்டு
லக்னோ, ஜன.11- ஆதித்யநாத் தலைமையிலான 5 ஆண்டு பாஜக ஆட்சியில், உத்தரப் பிரதேச மாநிலத்தின் சட்டம் – ஒழுங்கு சீர்குலைந்து விட்டது என்று சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் குற்றம் சாட்டியுள்ளார். ‘ஆஜ் தக்’ செய்திச் சேனல் நடத்திய நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அகி லேஷ், அதில் பல்வேறு கேள்வி களுக்கு பதிலளித்து பேசியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: உத்தரப் பிரதேசத்தில் சமாஜ்வாதி கட்சிக்குத்தான் மக்கள் அதிக ஆத ரவு அளித்து வருகின்றனர். நாங்கள் செல்லும் இடங்களில் எல்லாம் மக் கள் ஆதரவை காண முடிகிறது. விவ சாயிகளை, சிறுபான்மையினரை, இந்துக்களை பாஜக ஏமாற்றி விட்டது. மக்களுக்கான நலத்திட்டங்களை செய்யாமல் பிரிவினைவாத அரசி யலை பாஜக மேற்கொண்டு வருகிறது. கொரோனா காலத்தில் மக்க ளைக் காக்க பாஜக தவறிவிட்டது. கொரோனாவை கையாளத் தெரியா மல் மக்களின் உயிரிழப்பிற்கும் பாஜக காரணமாக அமைந்துவிட்டது. பாஜக ஆட்சியின் கீழ் உத்தரப் பிர தேசத்தில் யாரும் பாதுகாப்பாக இல்லை. முக்கியமாக பெண்கள் பாதுகாப்பை இழந்திருக்கிறார்கள். ‘ஹத்ராஸ், உன்னாவ் சம்பவங் களை யாரும் மறந்திருக்க முடியாது. கலவரங்கள், பாலியல் வன்கொடு மைகள், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் உத்தரப்பிரதேசத்தில் உச்சம் தொட்டுள்ளது. இதுதொடர் பான என்சிஆர்பி (NCRB) புள்ளி விவ ரங்களையும் பார்க்கலாம். ஆனால் ஆதித்யநாத் இதற்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. உத்தர பிரதேசத்தில் ஒருவேளை பாஜக மீண்டும் வெற்றிபெற்றாலும் ஆதித்யநாத் நீண்ட காலம் முதல்வ ராக இருக்க மாட்டார். அவரை பாஜக பிரதமர் வேட்பாளர் ஆக்கிவிடும். அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவின் பிரதமர் வேட்பாளராக ஆதித்யநாத்-தான் இருப்பார். பாஜக-வின் திட்டம் அதுவாகவே இருக்கும். இவ்வாறு அகிலேஷ் கூறியுள் ளார்.