ஆதார் எண்ணை பான் கார்டுடன் இணைக்கத் தவறினால் அபராதம்
புதுதில்லி,ஜன.15- ஆதார் எண்ணை பான் கார்டுடன் இணைப்பதற்கான காலக்கெடு வரும் மார்ச் 31 ஆம் தேதி வரை என்று ஒன்றிய அரசு காலக்கெடு நிர்ணயித்துள்ளது பல முறை ஆதார் மற்றும் பான் இணைப்புக்காக கெடு தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த முறை நிர்ணயிக்கப்பட்டுள்ள கெடு தேதிக்குள் பான் கார்ட் பயன்படுத்தி வரும் பயனர்கள் இணைக்கத் தவறினால் அவர்களது பான் கார்ட் முடக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. அப்படி முடக்கப்படும் பான் கார்டை பயன்படுத்தினால் வருமானவரித்துறைக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் செலுத்த வேண்டி இருக்கும். இதுவரை ஆதார் மற்றும் பான் கார்டை இணைக்காதவர்கள் இந்த லிங்கை https://eportal.incometax.gov.in/iec/foservices/#/pre-login/bl-link-aadhaar பயன்படுத்தி அதனை இணைக்கலாம். அதே போல ஆதார் மற்றும் பான் கார்டை இணைத்தவர்கள் அதனை பின்வரும் முறையின் கீழ் சரி பார்த்துக் கொள்ளலாம். www.incometaxindiaefiling.gov.in/aadhaarstatus என்ற லிங்கை அணுக வேண்டும். அதில் பயனர்கள் தங்களது ஆதார் மாற்றும் பான் எண்ணை என்டர் செய்ய வேண்டும். அதில் வியூ லிங்க் ஆதார் ஸ்டேட்டஸ் என உள்ள லிங்கை க்ளிக் செய்து இணைப்பு விவரத்தை அறிந்து கொள்ள லாம்.