விளையாட்டு
ஆசிய வில்வித்தையில் தங்கம் வென்றார் ஜோதி சுரேகா
ஆசிய வில்வித்தை சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் ஜோதி சுரேகா தங்கப் பதக்கம் வென்றார். வங்கதேசத்தின் டாக்கா நகரில்ஆசிய வில்வித்தை சாம்பியன்ஷிப் நடைபெற்று வருகிறது. இதில் மகளிருக்கான காம்பவுண்ட் பிரிவு இறுதி சுற்றில் இந்தியாவின் ஜோதிசுரேகா, முன்னாள் உலக சாம்பியனான கொரியாவின் ஓ யூஹ்யூனை எதிர்த்து விளையாடினார். இதில் ஜோதி சுரேகா 146-145 என்ற கணக்கில் வெற்றி பெற்று தங்கப் பதக்கம் வென்றார். முன்னதாக நடைபெற்ற காம்பவுண்ட் கலப்பு அணிகள் பிரிவில் ரிஷப் யாதவுடன் இணைந்து வெள்ளிப் பதக்கம் கைப்பற்றினார் ஜோதி சுரேகா. இறுதி சுற்றில் இந்திய ஜோடி 154-155 என்ற கணக்கில் கொரியாவின் கிம் யுன்ஹீ, சோய் யோங்கி ஜோடியிடம் தோல்வி கண்டது.