ஆசியாவிலேயே மிக மோசமான வீழ்ச்சி…
புதுதில்லி, டிச.21- அமெரிக்க டாலருக்கு இணை யான இந்திய ரூபாய் மதிப்பு, தொடர் சரிவில் இருந்து வரும் நிலையில், செவ்வாயன்று டாலருக்கு இணை யான இந்திய ரூபாய் மதிப்பு 75 ரூபாய் 573 காசுகளாக சரிந்துள்ளது. நடப்பு காலாண்டில் மட்டும் ரூபா யின் மதிப்பு 2.2 சதவிகிதம் வீழ்ச்சி யைப் பதிவு செய்துள்ளது. இதன் காரணமாக ஆசிய நாணயங்களி லேயே மிக மோசமான நாணயமாக இந்திய ரூபாய் மாறியுள்ளது. 2022 மார்ச் மாத இறுதிக்குள் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 78 ரூபாயாக சரிய லாம் என குவாண்ட்ஆர்ட் மார்க்கெட் சொலுசன்ஸ் (QuantArt Market Solutions) நிறுவனம் கணித்துள்ளது. கடந்த 2020 ஏப்ரல் மாதத்தில் டாலருக்கு இணையான ரூபாய் மதிப்பு 76 ரூபாய் 90 காசுகளாக வீழ்ச்சி யடைந்த நிலையில், 2021-22 நிதி யாண்டில் அதனையும் தாண்டியதாக (சுமார் 4 சதவிகிதம்) ரூபாய் மதிப்பு சரிவு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படு கிறது. அண்மைக் காலத்தில் மட்டும் பங்குச் சந்தையில் இருந்து மட்டும் 4 பில்லியன் டாலர் மதிப்பிலான மூல தனம் வெளியேறியது. அந்நிய முத லீட்டாளர்கள் தொடர்ந்து இந்திய பங்கு களில் இருந்து முதலீடுகளை வெளி யேற்றி வருகின்றனர். இது ரூபாய் மதிப்பு சரிவுக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.