அர்ஜெண்டினா : 9 சதவீதம் பொருளாதார வளர்ச்சி
பியூனஸ் அயர்ஸ்,ஜன.28- இடதுசாரிக் கொள்கைகளை நடைமுறைப்படுத்தியதால் அர் ஜெண்டினாவின் பொருளாதாரம் 9.3 விழுக்காடு உயர்வைக் கண்டுள்ளது. அந்நாட்டின் தேசிய புள்ளிவிபர மையம் வெளியிட்டுள்ள புள்ளிவிபரங்கள் அர்ஜெண்டினாவின் பொருளாதாரம் முன் னேறியுள்ளதைக் காட்டுகிறது, நவம்பர் 2020 முதல் நவம்பர் 2021 வரையிலான காலகட்டத்தில் அர்ஜெண்டினாவின் பொருளாதார நடவடிக்கைகள் 9.3 விழுக்காடு அதிகரித்துள்ளது. உள்நாட்டில் மக்களின் வாங்கும் சக்தியை அதிகரிக்கும் வகையிலான நடவடிக்கை களை இடதுசாரி அரசாங்கம் முன்னெடுத்ததுதான் முக்கியமான பங்கு வகித்தது என்று வல்லுநர்கள் குறிப்பிட்டுள்ளனர். கோவிட் 19 தொற்றால் பெரும் பாதிப்புக்கு உள்ளான துறைகள், அரசின் பொருளாதார செயல்பாடுகள் மீண்டுள்ளது என்று அர் ஜெண்டினாவின் பொருளாதாரத்துறை கூறியுள்ளது. ரெப்ரோ 2 என்ற திட்டத்தை அரசு அறிமுகப்படுத்தியது. எந்தெந்தத் துறைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டனவோ, அவற்றில் அரசின் பங்களிப்பை இந்தத் திட்டம் அதிகப்படுத்தியது.
சுற்றுலாத்துறையிலும் இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. சுற்றுலாத்துறையில் செயல் படும் நிறுவனங்களுக்கு கடன் வசதியையும் அறிமுகப்படுத்தினர். சுரங்கத்துறை நல்ல வளர்ச்சியைக் கண்டிருக்கிறது. நவம்பர் 2020ஐ ஒப்பிடுகையில் ஓராண்டில் 20 விழுக்காடு வளர்ச்சியை அத்துறை அடைந்துள்ளது. வேலைகள் இழப்பை ஈடுகட்டியதோடு, புதிய வேலைவாய்ப்புகளையும் சுரங்கத்தொழில் உருவாக்கியது. ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சியில் இத்துறையின் பங்களிப்பு மட்டுமே 1.1 விழுக்காடு என்பது குறிப்பிடத்தக்கதாகும். இந்த வளர்ச்சியைத் தொடர்ந்து தக்க வைத்துக் கொள்ள முடியும் என்றும் தேசிய புள்ளிவிபர மையம் கணித்திருக்கிறது. மின்சாரம், எரிவாயு, தண்ணீர் மற்றும் மீன் பிடித்தல் ஆகிய துறைகள் மட்டுமே எதிர்மறை வளர்ச்சியைக் கண்டுள்ளன. இந்தத் துறைகள் வளர்ச்சி பெற்றிருந் தால் ஒட்டுமொத்த வளர்ச்சியில் மேலும் 0.1 விழுக்காட்டை அடைந்தி ருக்க முடியும். வரும் நாட்களில் இந்தத் துறைகள் மீது கூடுதல் கவனம் செலுத்த இடதுசாரி அரசாங்கம் முடிவு செய்துள்ளது.