அம்பானியை பின்னுக்கு தள்ளிய அதானி: ஆசியாவின் நம்பர் ஒன் பணக்காரர் ஆனார்!
இந்தியாவின் நம்பர் 1 பணக்காரராக இருந்த முகேஷ் அம்பானி உலக பணக்காரர் பட்டியலில் முதல் பத்து இடங்களுக்குள் இருந்தார் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் முகேஷ் அம்பானியை முந்தி அதானி ஆசியாவின் நம்பர் ஒன் பணக்காரர் என்ற பெருமையை பெற்று இருப்பது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனை அடுத்து ஆசியாவின் முதல் பெரும் பணக்காரராக இருந்த முகேஷ் அம்பானி 2வது இடத்திற்கு தள்ளப்பட்டு உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதானி குழுமத்தின் சொத்து மதிப்பு கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் அதிகரித்துக்கொண்டே வந்தது என்பதும் அவரது நிறுவனங்களின் பங்கு மார்க்கெட் மதிப்பு ராக்கெட் வேகத்தில் உயர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டில் மட்டும் அதானியின் சொத்து மதிப்பு 4.12 லட்சம் கோடி ரூபாயை அதிகரித்துள்ளது.
ஆனால் அம்பானியின் சொத்து மதிப்பு ஒரு லட்சம் கோடி மட்டுமே அதிகரித்துள்ளதாகவும் தெரிகிறது. பங்குவர்த்தகத்தில் முகேஷ் அம்பானி நிறுவனங்களின் பங்குகள் வீழ்ச்சி அடைந்து கொண்டே வரும் நிலையில் இன்னொரு பக்கம் அதானி நிறுவனங்களின் பங்குகள் உயர்ந்து கொண்டே வருவதால் அம்பானியை அதானி முந்திவிட்டார்.
அதானியின் சொத்து மதிப்பு 6.60 லட்சம் கோடி என்றும் முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு அதைவிட குறைவாக சரிந்துள்ளதை அடுத்து இந்தியா மட்டுமின்றி ஆசிய அளவிலும் நம்பர் 1 பணக்காரராக அதானி உயர்ந்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.