தமிழகம்
அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் 12 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து சென்னையில் ஆர்ப்பாட்டம்
நவம்பர் 26 ல், விவசாயிகள் போராட்டம் ஓராண்டு முடிந்து அடுத்த ஆண்டு துவங்கும் நாளில், 44 தொழிலாளர் சட்டங்களை நான்காக சுருக்குவதை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட 12 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் இந்தியா முழுமையிலும் இன்று போராட்டம் நடைபெறுகிறது.
இதன் ஒரு பகுதியாக, தமிழகத்தின் தலைநகர் சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஏஐடியூசி மாநிலப் பொதுச் செயலாளர் டி.எம்.மூர்த்தி கலந்து கொண்டு உரையாற்றினார்.