உள்ளூர் செய்திகள்
அனைத்து சங்கங்கள் சார்பில் ஊட்டியில் ஆர்ப்பாட்டம்
விவசாயிகள் போராட்டம் ஓராண்டு நிறைவு பெற்றதை ஒட்டி அனைத்து சங்கங்கள் சார்பில் ஊட்டி பஸ்நிலையத்தில் தோழர் சையத் இப்ராஹிம் (ஏஐடியுசி), தோழர் சங்கரலிங்கம் (சிஐடியு), செல்வராஜ்(எல்பிஎப்) ஆகியோர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அனைத்துசங்க ஆர்ப்பாட்டத்தில் தோழர் மூர்த்தி (ஏஐடியுசி) மாவட்ட செயலாளர் நன்றியுரை கூறினார். ஆர்ப்பாட்டத்தில் ஆஷா பணியாளர்கள் போக்குவரத்து தொழிலாளர்கள் திரளாக கலந்து கொண்டனர்.