இந்தியா

அதிக சொத்து கொண்ட கட்சிகள்: பாஜக முதலிடம் – பிற கட்சிகளின் சொத்துமதிப்பு எவ்வளவு தெரியுமா?

மொத்தமுள்ள 7 தேசியக் கட்சிகளில், ரூ 4,847.78 கோடிகளுடன் அதிக சொத்துக்களைக் கொண்ட கட்சிகளின் பட்டியலில் பாஜக முதலிடம் பெற்றுள்ளது. பகுஜன் சமாஜ் கட்சி இரண்டாம் இடம் பெற்றுள்ளது. மொத்தமுள்ள 44 மாநில கட்சிகளின் பட்டியலில் சமாஜ்வாதி கட்சி அதிக சொத்துக்களுடன் முதலிடத்தில் உள்ளது.

ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான அமைப்பு எனப்படும் அசோசியேட்ஸ் ஆப் டெமாக்ரடிக் ரிஃபார்ம்ஸ் (ADR) அமைப்பு நடத்திய கருத்துக்கணிப்புகளின் படி, 2019-20 ஆம் நிதியாண்டில் தேசிய மற்றும் மாநில கட்சிகளின் சொத்துக்கள் மற்றும் கடன் பற்றிய அறிக்கை வெளியாகியுள்ளது.

இந்த ஆய்வின்படி, 2019-20 நிதியாண்டில் ஏழு தேசியக் கட்சிகளின் மொத்த சொத்து மதிப்பு ரூ.6,988.57 கோடி எனவும், 44 மாநில கட்சிகளின் மொத்த சொத்து மதிப்பு ரூ.2,129.38 கோடி என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகபட்ச சொத்துகளை கொண்ட ஏழு தேசியக் கட்சிகளில், ரூ. 4847.78 கோடியுடன் பாஜக முதல் இடத்தை பிடித்துள்ளது. ரூ. 698.33 கோடி சொத்துக்களுடன் பகுஜன் சமாஜ் இரண்டாம் இடத்தையும், ரூ.588.16 கோடி சொத்துக்களுடன் காங்கிரஸ் மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளன. மார்க்சிஸ்ட் கட்சி ரூ.569.519 கோடி சொத்துக்களையும், திரிணாமுல் காங்கிரஸ் ரூ.247.78 கோடி சொத்துக்களையும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ரூ.29.78 கோடி சொத்துக்களையும், தேசியவாத காங்கிரஸ் கட்சி ரூ.8.20 கோடி சொத்துக்களையும் கொண்டு அடுத்தடுத்த இடங்களில் உள்ளது.

மொத்தமுள்ள 44 மாநிலக் கட்சிகளில், சமாஜ்வாதி கட்சி அதிகபட்சமாக ரூ.563.47 கோடி சொத்துக்களுடன் முதல் இடத்தில் உள்ளது. டிஆர்எஸ் கட்சி ரூ.301.47 கோடி சொத்துக்களுடன் இரண்டாம் இடத்தையும் , அதிமுக ரூ.267.61 கோடி சொத்துக்களுடன் மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளன. தெலுங்கு தேசம் ரூ.188.19 கோடி சொத்துக்களையும், சிவசேனா ரூ.185.90 கோடி சொத்துக்களையும், திமுக ரூ.184.24 கோடி சொத்துக்களையும், ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் ரூ.143.60 கோடி சொத்துக்களையும், பிஜு ஜனதா தளம் ரூ.128.752 கோடி சொத்துக்களையும், ஜனதா தளம் ரூ.45.094 கோடி சொத்துக்களையும்,ராஷ்ட்டிரிய ஜனதா தளம் ரூ.20.389 கோடி சொத்துக்களையும் கொண்டு அடுத்தடுத்த இடங்களில் உள்ளது.

மொத்தமுள்ள இந்த சொத்துக்களின் கீழ் நிரந்தர வைப்பு நிதியாக பாஜக 3,253.00 கோடியும், பகுஜன் சமாஜ் ரூ.618.86 கோடியும், காங்கிரஸ் ரூ.240.90 கோடியும் கொண்டுள்ளன.

மாநிலக் கட்சிகளில், சமாஜ்வாதி (ரூ. 434.219 கோடி), டிஆர்எஸ் (ரூ. 256.01 கோடி), அதிமுக (ரூ. 246.90 கோடி), திமுக (ரூ. 162.425 கோடி), சிவசேனா (ரூ. 148.46 கோடி), பிஜு ஜனதா தளம் (ரூ. 118.425 கோடி) நிரந்தர வைப்பு நிதியை கொண்டுள்ளன.

2019-20 நிதியாண்டில் தேசிய கட்சிகள் ரூ.74.27 கோடியையும், பிராந்திய கட்சிகள் ரூ.60.66 கோடியையும் தங்களின் மொத்த கடன்களாக அறிவித்துள்ளன.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button