தமிழகம்
அண்ணாமலை, H.ராஜா உட்பட சம்பந்தப்பட்டவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும்! – கே.சுப்பராயன் MP அறச்சீற்றம்
கே.சுப்பராயன் MP முகநூல் பதிவில் இருந்து…
மாணவி லாவண்யாவின் புதிய வீடியோ வெளிவந்து விட்டதன் மூலம், பாஜகவினரின் மதக்கலவரத்தை உருவாக்கும் உள்நோக்கம் கொண்ட வதந்திக்கு முற்றுப் புள்ளிவைக்கப்பட்டுவிட்டது!
இதன் மூலம் மத மோதலை தமிழ்நாட்டில் உருவாக்க முயன்ற தீய முகங்கள் அடையாளப்பட்டுள்ளன! இது பொது அமைதியை சீர்குலைக்கிற திட்டமிட்ட சட்டவிரோத குற்றச்செயலாகும்!
எனவே, மாநில அரசு அரசியல் உறுதியுடன் அண்ணாமலை, H.ராஜா உட்பட சம்பந்தப்பட்டவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும்! மேலும்,உரிய குற்ற எதிர்ப்பு நடவடிக்கைகளை சட்டபூர்வமாக, விரைவாக மேற்கொள்ள வேண்டும்!