அகிலேஷ் செல்வாக்கு அதிகரிப்பால் அச்சத்தில் உ.பி. பாஜக தலைவர்கள்!
லக்னோ, ஜன. 28 – உத்தரப் பிரதேசத்தில் பாஜக கூட்டணிக்கும், சமாஜ்வாதி கூட்டணி க்கும் இடையே கடும் போட்டி ஏற்பட்டு ள்ளது. குறிப்பாக சமாஜ்வாதி தலை வர் அகிலேஷூக்கான செல்வாக்கு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. உத்தரப் பிரதேசத்தில் பாஜக-வின் கோட்டையாக பார்க்கப்படும் பகுதி மேற்கு உத்தரப்பிரதேசம் ஆகும். இங்கும் பாஜக-வின் பிடி தளர்ந்து வரு கிறது. அகிலேஷூக்கு ஆதரவு கூடிக் கொண்டிருக்கிறது. இது உ.பி. பாஜக தலைவர்களை அதிர்ச்சியில் தள்ளியிருக்கிறது. அவர்கள் இந்தச் செய்தியை உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் கவனத்திற்கு கொண்டுசென்ற நிலையில், உத்தரப்பிரதேச தேர்தல் பணிகள் முழுவதையும் அமித்ஷா தனது பொறுப்பில் எடுத்துக் கொண்டு உள்ளார்.
ராஜ்நாத் உள்ளிட்ட அமைச்சர் மூத்த அமைச்சர்களை களத்தில் இறக்கிவிட்டுள்ள அவர், தானே நேரடி யாக வீடு, வீடாகச் சென்று வாக்கு சேகரிக்க ஆரம்பித்துள்ளார். “உத்தரப் பிரதேசத்தின் சட்டம் – ஒழுங்கு நிலை குறித்து விமர்சிக்க சமாஜ்வாதி தலைவர் அகிலேஷூக்கு எந்த தகுதியும் கிடையாது. அவரது கட்சி ஆட்சிக்கு வந்தால் உ.பி.யில் குண்டர்களின் ராஜ்ஜியம் மறுபடியும் தலைதூக்கும்” என்று மக்களைப் பய முறுத்துவதுடன், “மோடி அரசு இல்லையென்றால் ராமர் கோவில் கட்டப்பட்டு இருக்குமா? காசி விஸ்வ நாதர் கோவில் சீரமைக்கப்பட்டு இருக்குமா? காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து 370 ரத்து செய்யப்பட்டு இருக்குமா?” என்று மதவெறியையும் தூண்டி வருகிறார். “22 கோடி மக்களைக் கொண்ட உ.பி. மாநிலத் தேர்தல் வெறும் எம்எல்ஏ-வையோ, முதல்வரையோ தேர்ந்தெடுக்கும் தேர்தல் அல்ல. மாறாக, இந்தியாவின் எதிர்காலத்தை முடிவு செய்யும் தேர்தல்” என்றும் வீடு, வீடாகப் பிரச்சாரம் செய்து வருகிறார்.